காலி சிறையில் கைதி ஒருவர் உயிரிழப்பு !

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

காலி கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ல் கைதி ஒருவர் நேற்று (03) உயிரிழந்ததாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த கைதி கடந்த வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சிறை வைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கைதி காய்ச்சல் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

உயிரிழந்த கைதி கொட்டவகம பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவர் என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் மாத்தறை சிறைச்சாலையில் இரண்டு கைதிகள் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தனர்.

இதேவேளை, சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

 


Related Posts