Font size: 15px12px
Print
கேரளாவில் நரேந்திர மோடி கலந்து கொண்ட பொதுக்கூட்ட மேடையில் மாட்டுச்சாணம் தெளிக்க முயற்சித்த காங்கிரஸ் தொண்டர்களுக்கும், அதனை தடுக்க முயன்ற பாஜக தொண்டர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்து மோதலை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தலைவர் அனீஸ், “காங்கிரஸ் கட்சியின் திருச்சூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் டி.என்.பிரதாபன் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்” என எச்சரித்துள்ளார். “மோடி பேசிய பொதுக்கூட்ட மேடையின் மீது மாட்டுச்சாணம் தெளிக்கப்பட்டால் காங்கிரஸ் கட்சியினர் செல்லும் இடங்கள் அனைத்திலும் மாட்டுச்சாணம் வீசப்படும்” எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
Related Posts