ஆயுர்வேத உற்பத்திக்கு வரி விலக்கு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சுகாதாரச் செலவைக் குறைக்கும் வகையில், ஆயுர்வேத உற்பத்திகள், மருந்துகள் மற்றும் சுதேச மருத்துவம் தொடர்பான தொழில்துறைகளுக்கு வற் வரியில் இருந்து விலக்களிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதுவரை நாம் சுதேச மருத்துவத் துறையில் பல சிறந்த சாதனைகளைப் படைத்துள்ளோம். ஆயுர்வேத உற்பத்திகள், மருந்துகள் மற்றும் சுதேச மருத்துவம் தொடர்பான தொழில்துறைகளுக்கு வற் வரியில் இருந்து விலக்களிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் மூலம் சுகாதாரச் செலவுகளைக் குறைக்க முடிந்தது.

பாரம்பரிய மருத்துவத்தை பாதுகாக்க விஷேட பிரிவொன்றை நிறுவ அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. பாரம்பரிய மருத்துவத் முறைக்கு ஒரு முறையான நிறுவனம் ஸ்தாபிக்கப்படும் வரை பாரம்பரிய மருத்துவத்தைப் பாதிக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக சுதேச மருத்துவ அமைச்சின் கீழ் இந்த விஷேட பிரிவு நிறுவப்படவுள்ளது என்று தெரிவித்தார். 


Related Posts