Font size:
Print
புத்தாண்டின் முதல் பாராளுமன்ற அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது.
முதல் பாராளுமன்ற அமர்விலேயே அரசாங்கத்துக்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிகள் கறுப்பு ஆடைகளை அணிந்தவாறு பாராளுமன்றத்துக்கு வந்தனர்.
இதுதொடர்பில் கருத்து வெளியட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார,
”நாட்டு மக்கள் வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிரான போராட்டத்தின் அடையாளமாகத்தான் இன்று கறுப்பு உடையில் பாராளுமன்றத்துக்கு வந்துள்ளோம்.” என்றார்.
எவ்வாறாயினும், தலதா அத்துகோரள, கபீர் ஹாசிம் உள்ளிட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சாதாரண உடையிலேயே பாராளுமன்றத்திற்கு வந்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
Related Posts