கிழக்கில் அடித்து ஊற்றும் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கிழக்கு மாகாணத்தில் அடைமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
மட்டக்களப்பு ரயில் மார்க்கம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் மட்டக்களப்பு மார்க்கத்தினூடான ரயில் போக்குவரத்து பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் காரணமாக இன்று(11) காலை 6.05 க்கு கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு வரை பயணிக்கவிருந்த உதயதேவி ரயிலும் இரத்து செய்யப்பட்டதாக ரயில்வே பொது முகாமையாளர் இதிபொலகே தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு(10) மட்டக்களப்பு நோக்கி பயணிக்கவிருந்த இரவு நேர தபால் ரயிலும் இரத்து செய்யப்பட்டது.
அத்துடன், கிழக்கு மாகாணத்தில் சில பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, மட்டக்களப்பு மத்தி, கல்முனை, அக்கரைப்பற்று கல்வி வலய பாடசாலைகளுக்கே விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதனைத்தவிர சம்மாந்துறை கல்வி வலயத்தில், வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மாத்திரம் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிப்புற்ற அம்பாரை மாவட்ட தமிழ் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளுக்கு நேரில் சென்று அவர்களின் நிலைகளை பார்வையிற்று மக்களின் உடனடி தேவைகளை கண்டறிந்து உதவி செய்யும் பணியை கிழக்கின் கேடயம் பிரதானி எஸ்.எம். சபீஸ் முன்னெடுத்து வருகிறார்.

தொடர் மழை காரணமாக அம்பாறை மாவட்டத்தின் அனைத்து குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதோடு அடை மழையும் விடாது பெய்து வருகின்றது இதனால் எல்லா இடங்களும் வெள்ளமயமாக காட்சியளிக்கிறது.

இன்றும் தின தொழிலில் ஈடுபடும் அம்பாரை மாவட்ட பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த தமிழ் முஸ்லிம் குடும்பங்களை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கான உதவிகளை முடியுமான வகையில் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்களின் முன்னாள் தலைவரும், கிழக்கின் கேடயத்தின் பிரதானியுமான எஸ். எம் சபீஸ் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Posts