மீனகயா - உதயதேவி ரயில் சேவைகள் ரத்து

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை  (12) காலை 06.05 மணிக்கு மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை செல்லும் உதயதேவி ரயிலையும், மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி செல்லும் ரயிலையும் இரத்து செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பூனானி மற்றும் வாழைச்சேனை நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பேச்சாளர் தெரிவித்தார்.

இன்று (11) இரவு கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு வரை பயணித்த மீனகயா இரவு அஞ்சல் ரயில்களை இரத்து செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி இரவு 7.15 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு மற்றும் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை வரை செல்லும் தபால் ரயில்களை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Related Posts