Font size:
Print
யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியில் கைக்குண்டுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (14) பொலிஸார் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த போது , வீதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த இளைஞனை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.இதன்போது , இளைஞனின் உடைமையில் இருந்து கைக்குண்டை மீட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து இளைஞனை கைது செய்த பொலிஸார் , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த போது , திருட்டு சம்பவங்கள் சிலவற்றுடன் இளைஞனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
தொடர்ந்தும் இளைஞனை பொலிஸ் காவலில் வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Related Posts