பேச்சுவார்த்தை தோல்வி – பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

தமது பணிப்புறக்கணிப்பை திட்டமிட்டப்படி 24 மணித்தியாலங்கள் தொடரவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி இன்று காலை 6.30 மணிக்கு ஆரம்பமான சுகாதார பணிப்புறக்கணிப்பு நாளை காலை 6.30 மணி வரை நடைபெறவுள்ளது.

தமது பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்துடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ள நிலையில், பணிப்புறக்கணிப்பை தொடரவுள்ளதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

சுகாதார அமைச்சர் மருத்துவர் ரமேஷ் பத்திரன மற்றும் பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தொழிற்சங்க பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.


Related Posts