வெறிச்சோடி காணப்படும் மரக்கறி கடைகள்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மரக்கறிகளின் விலை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருவதால் நாடளாவிய ரீதியில் பாவனையாளர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியிருந்ததுடன், மரக்கறி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

மரக்கறிகள் கிடைத்துள்ள போதிலும், கொழும்பு பேலியகொடை மெனிங் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதுடன், கடைகள் வெறிச்சோடியிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

பேலியகொட மெனிங் சந்தையில் (சில்லறை விலை) போஞ்சி கிலோ 1100 ரூபா , காரட் கிலோ 2100 ரூபா, கோவா கிலோ 750 ரூபா , தக்காளி கிலோ 400 ரூபா , பூசணி கிலோ 200 ரூபா , பச்சை மிளகாய் கிலோ 1100 ரூபா , வெளிநாட்டு பெரிய வெங்காயம் 430 ரூபாவாக பதிவாகியுள்ளது.


Related Posts