நடிகை அனுபமா ப்ரேமம் படம் மூலமாக பெரிய அளவில் பிரபலம் ஆனவர். அவர் அதற்கு பிறகு தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து தற்போது முக்கிய நடிகையாக வளர்ந்திருக்கிறார். மேலும் சமீபகாலமாக அவர் க்ளாமராகி படங்களில் நடிக்கவும் தொடங்கி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகின்றன. இந்நிலையில் அனுபமா திருமண கோலத்தில் தாலி உடன் போட்டோக்கள் வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்து அனுபமாவுக்கு திருமணம் முடிந்துவிட்டதா என ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் சைரன் படத்தின் ஷூட்டிங்கில் எடுத்த போட்டோ தான் அது. படத்தில் ஜெயம் ரவியை அனுபமா திருமணம் செய்வது போல காட்சி இருக்கிறது. இந்த படத்திற்க்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கலாம், ஏனெனில் ஏற்கனவே தமிழ்நாடு பக்கம் இவருக்கு பயங்கர வரவேற்பு. அனுபமா ஆர்மி வைக்கும் அளவிற்கு தமிழ் ரசிகர்கள் இவர் மீது பித்து பிடித்துள்ளார்கள் அப்படி இருக்கும் போது தமிழில் நடிக்க வந்தால், கண்டிப்பாக தமிழ்நாட்டில் வெற்றிடமாக உள்ள தரமான கதாநாயகி இடத்தை இவர் நிரப்புவார் என எதிர்பார்க்கலாம்.