நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகி செம ஹிட் அடித்த திரைப்படம் சிவா மனசுல சக்தி. இந்த படத்தை பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. காரணம் ஹீரோவையே காமெடியனாக காட்டியிருப்பார்கள். படம் முழுக்க காமெடி என்பதால் எப்போது பார்த்தாலும் புதிதாகவே தோன்றும் திரைப்படங்களின் லிஸ்டில் இந்தப்படமும் ஒன்று. அந்த படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் அனுயா பகவத். முதல் படமே வெற்றிகரமாக அமைய அடுத்தடுத்து படங்கள் நடித்துவந்த அனுயாவின் சினிமா பயணத்திற்கு ஒரு பெரிய பிரச்சனையாக அமைந்தது இவரது ஆபாசமான படங்கள் மற்றும் வீடியோக்கள். பாடகி சுசித்ரா ஆபாசமான படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியது நமக்கு நன்றாகவே தெரியும். இதனால் அனுயா பகவத் சர்ச்சையில் சிக்க சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்தார்.
அண்மையில் ஒரு பேட்டியில் அனுயா பேசும்போது, அந்த மார்பிங் வீடியோவால் நான் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானேன், அந்த நேரத்தில் பிரச்சனையை நான் எப்படி எதிர்கொண்டேன் என்று எனக்கு தெரியவில்லை.தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் கூட வந்தது, ஆனால் அந்த எண்ணத்தை மாற்றியது குடும்பம் தான். என்னை அவர்கள் புரிந்துகொண்டு துணையாக இருந்ததால் தப்பித்தேன் என சோகமான விஷயத்தை பகிர்ந்துள்ளார். யாரோ செய்த தவறால் ஒரு திறமையான நடிகை பல ஆண்டுகளாக வீட்டிற்குள்ளே முடங்கியுள்ளார். அவரது எதிர்காலம் போனது மட்டுமின்றி உயிரையே விடும் அளவிற்க்கு மன அழுத்தத்தில் இருந்துள்ளார். சினிமாவை நோக்கி வரும் இளம் ஹீரோயின்களுக்கு இவரது வாழ்க்கை சிறந்த எடுத்துக்காட்டு என்கிறார்கள் சினிமா வட்டாரத்தை சேர்ந்தவர்கள்.