உயர்தர விவசாய விஞ்ஞான பாட மீள் பரீட்சை இன்று!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் இரத்து செய்யப்பட்ட விவசாய விஞ்ஞான பாடத்திற்கான பரீட்சை இன்று(01) மீண்டும் இடம்பெறுகின்றது.

விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் பகுதி பரீட்சை காலை 8.30 மணி முதல் முற்பகல் 11.40 மணி வரை நடைபெறவுள்ளது.

முதலாம் பகுதி பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் புதிய பரீட்சை அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

வினாப்பத்திரங்கள் முன்கூட்டியே வௌியானதால் விவசாய விஞ்ஞான பாடத்தின் 2 பகுதிகளுக்குமான பரீட்சைகளும் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts