எரிபொருள் விலை அதிகரிப்பு: பஸ் கட்டணத்தை 10 வீதத்தால் அதிகரிக்குமாறு க

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பஸ் கட்டணத்தில் திருத்தம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக பஸ்  சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் இன்று (01) கலந்துரையாடவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

10% பஸ் கட்டண திருத்தம் அவசியம் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாடசாலை வேன் கட்டணங்கள் தொடர்பில் பெற்றோருடன் கலந்துரையாடி தேவையான தீர்மானங்களை எடுப்பதற்கு அதன் உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்கப்போவதில்லை என  முச்சக்கரவண்டி சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Related Posts