Font size: 15px12px
Print
அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்கின் நியூராலிங்க் நிறுவனம், மூளையில் சிப்களைப் பொருத்தி, அவற்றை கணினிகளுடன் இணைப்பதன் மூலம் மனிதர்களின் பார்வை மற்றும் இயக்கத்தை மீட்டெடுக்க முடியும் எனக் கூறுகிறது
மனித மூளைக்குள் சிப்பை பொருத்தி சோதனையை தொடங்கியிருக்கிறது. மூளைக்கும் கணினிக்குமான இன்டெர்பேஸ் இணைப்பை உருவாக்கும் வகையிலான சிப் மனிதனின் மூளையில் பொருத்தப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குரங்குகளை வைத்து இந்த சோதனையை நியூராலிங்க் நிறுவனம் செய்திருந்தது. தற்போது முதன்முறையாக மனிதனுக்கு பொருத்தப்பட்டு சோதனை நடைபெறுகிறது.
எலான் மஸ்க் இதனை அறிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சோதனை தொடங்கியதாகவும், சிப் பொருத்தப்பட்டிருக்கும் அந்த நபர் உடல்நலன் தேறி வருவதாகவும் எலான் மஸ்க் கூறியிருக்கிறார்.
Related Posts