அல்சைமருக்கு வயாகரா மாத்திரை? அடடே கண்டுபிடிப்பு!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

விறைப்புத் தன்மைக்காக ஆண்களுக்கு பரிந்துரைக்கப்படும் வயாகரா மாத்திரை, நினைவுத் திறனை பாதிக்கும் அல்சைமர் நோய்க்கும் மருந்தாகிறது என ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

அல்சைமர் என்பது அறிவாற்றல் இழப்பு மற்றும் ஞாபக மறதி நோயின் மிகப்பெரும் வடிவாக பார்க்கப்படுகிறது. 60 வயதுக்கு மேலானவர்களை பாதிக்கும் இந்த நோய் அவர்களின் இயல்பு வாழ்க்கையை குலைக்கக்கூடியது. அல்சைமர் பாதிப்பை குறைக்கவும், தள்ளிப்போடவும் பல்வேறு நாடுகளிலும் பரவலான மருத்துவ ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அவற்றில் ஒன்றாக அல்சைமரின் ஆரம்ப பாதிப்புகள் அல்லது லேசான பாதிப்புகளை வயாகராவின் மருத்துவ உட்பொருட்கள் குணப்படுத்த உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்க்கான மருந்துகள் தொடர்பான ஆய்வில்தான், விபத்தாக வயாகரா மாத்திரை கண்டறியப்பட்டது. அந்த ஆய்வில் சோதனை எலிகளாக பங்கேற்ற ஆண்கள் பலரும், தங்களுக்கு வழங்கப்பட்ட ஆய்வுக்கான மாத்திரைகளை திருப்பி அளிக்க மறுத்தபோது ஆய்வாளர்கள் துணுக்குற்றனர்.

ஆய்வுக்கான மாத்திரையை உட்கொண்டபோதெல்லாம், தங்களுக்கு நீடித்த விறைப்பு ஏற்படுவதாகவும், அதனால் தங்கள் சொந்த பயன்பாட்டுக்கு அவை அவசியம் என்றும் அந்த ஆண்கள் விளக்கமளித்தனர்.

 

Related Posts