குருவாயூர் கோயில் யானைகளை அடித்து துன்புறுத்தும் பாகன்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

குருவாயூர் கோயிலுக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கிய யானை உட்பட 3 யானைகளை பாகன்கள் அடித்து துன்புறுத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு முன்னாள் முதல்வரும், அதிமுக முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, கடந்த 2001-ம் ஆண்டு கிருஷ்ணா என்ற யானை குட்டியை குருவாயூர் கோயிலுக்குக் காணிக்கையாக வழங்கியிருந்தார். இந்த கோயிலுக்குச் சொந்தமான யானைகள், குருவாயூர் அருகே உள்ள புன்னத்தூர் யானைக்கோட்டம் என்கிற பகுதியில் குருவாயூர் தேவஸ்தானம் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணா யானை உட்பட 3 யானைகளை, பாகன்கள் கடுமையாக அடித்து துன்புறுத்தி உள்ளனர். அப்போது யானைகளைப் பராமரிப்பதற்காக பயன்படுத்தப்படும் வடிகோள் எனப்படும் குச்சியைக் கொண்டு யானைகளை கடுமையாக பாகங்கள் தாக்கியுள்ளனர். 

இந்த வீடியோ காட்சிகள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து யானைகளைத் தாக்கி துன்புறுத்திய இரண்டு யானை பாகன்களைப் பணியிடை நீக்கம் செய்துள்ள தேவஸ்தானம், இது தொடர்பாக விசாரணை நடத்த குழு ஒன்றை அமைத்துள்ளது.

 


 


 

Related Posts