என்ன உயிரோட விளையாட்டு? ஆபரேஷன் தியேட்டரில் திருமண போட்டோ ஷூட்!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்ட சுகாதாரத் துறை மருத்துவர் அபிஷேக் என்பவர், பரமசாகர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார். அவருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷூட்எடுக்க முடிவு செய்துள்ளார்.

இந்த ஜோடி வித்தியசமாக அரசு மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டரிலேயே போட்டோ ஷூட் நடத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

அரசு மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டரை தவறாக பயன்படுத்தியது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஆபரேஷன் தியேட்டரில் போட்டோ ஷூட் நடத்தியது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட சுகாதார அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

 

Related Posts