புகையிரதத்தில் மோதி சிறுவன் பலி

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

திருகோணாமலை மாவட்டத்தின் தம்பலகமம் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட   சிராஜ் நகர் பகுதியில் சிறுவன் ஒருவன் புகையிரதத்தில்  மோதி உயிரிழந்த்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நலிம் முஹம்மது சப்ரித் வயது 14 என்ற சிறுவன் ஒருவனே இவ்வாறு புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இவ்விபத்துச் சம்பவம் நேற்று (11) மாலை இடம்பெற்றுள்ளது

கல்ஒயாவிலிருந்து திருகோணமலையை நோக்கிச்  சென்ற கடுகதி புகையிரத்தில் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த இளைஞன் அருகில் உள்ள ஆற்றில் தனியாக மீன்பிடிக்க சென்ற வேளை ரயில் கடவையை   கடக்க முற்பட்ட போது இவ்விபத்து ஏற்பட்டு இருக்கலாமென பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.

தற்போது இறந்த சிறுவனின் சடலம் கந்தளாய் தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணை தம்பலகாமம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts