நயன்தாராவை ஓரம் கட்டிய ஸ்ரீதேவி மகள்! ஆடிப்போன தமிழ் சினிமா!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் தான் ஜான்வி கபூர். இவர் பாலிவுட் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். அங்கு இவர் ஒரு சில படங்களே நடித்துள்ளார். இவர் தெலுங்கு தேவரா எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தென்னிந்திய சினிமாவில் இதுவே முதல் திரைப்படம்.

இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஜான்வி ரூ. 5 கோடி வரை சம்பளமாக வாங்கியுள்ளாராம். இது ஒரு பக்கம் இருக்க, அடுத்ததாக ராம் சரணின் திரைப்படத்திலும் ஜான்வி தான் ஹீரோயினாக நடிக்கப்போவதாக கூறபடுகிறது. இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஜான்வி கபூர் ரூ. 10 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். அடுத்த படத்திலேயே ரூ. 10 கோடியா என தெலுங்கு திரையுலகமே ஆடிப்போய் விட்டதாம்.

கடந்த 20 ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவில் கலக்கி வரும் நடிகை நயன்தாரா கூட, தற்போது ரூ. 12 கோடி வரை தான் சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது. ஆனால், ஜான்வி கபூர் 10 கோடி சம்பளம் கேட்டுள்ள விஷயம் திரை வட்டாரத்தில் அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. பின்னர் வாரிசு நடிகை என்றால் சும்மாவா?? அம்மா சேர்த்து வைத்த பெயருக்கும் சேர்த்து இவரே சம்பளம் வாங்குவார் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். 

Related Posts