மும்பையில் வாழ்வதை விட இலங்கையில் வாழ்வது மலிவானது என்றும், தானென்றால் மும்பையில் உள்ள தனது சொத்துக்களை விற்று இலங்கையில் குடியேறுவதாகவும், இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய நிறுவனங்கள் இப்போது எங்கள் விமான நிலையத்தைக் பொறுப்பேற்றுள்ளது. அவர்கள் எங்கள் மூன்று விமான நிலையங்களை நிர்வகிக்கிறார்கள். இந்த முடிவு எங்களுக்கு மிகவும் உதவும் ஒன்றாகும்.
இந்திய நிறுவனங்களும் நமது எண்ணெய் டேங்கர்களை கையகப்படுத்தியுள்ளன. இந்திய நிறுவனங்களும் நமக்கு சூரிய சக்தியை வழங்குகின்றன.
இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்ய சொன்னதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன். ஏனெனில் இலங்கையும் இந்தியாவின் ஒரு பகுதி.
உண்மையில் இலங்கையில் பல வாய்ப்புகள் உள்ளன. நானாக இருந்தால் மும்பையில் உள்ள என் சொத்தை விற்றுவிட்டு இலங்கையில் குடியேறுவேன். இங்கு வாழ்வது மிகவும் மலிவானது..