Font size:
Print
அமெரிக்காவை சேர்ந்த ஹார்வி சுல்ட்ஸெர் என்பவர் தனது மனைவியின் பெருங்குடல் புற்று நோய்க்கு சிகிச்சை கோரி பாப்டிஸ்ட் ஹெல்த் போகா ரேடன் மண்டல மருத்துவமனையில் மனைவி சாண்ட்ரா சுல்ட்ஸெரை சேர்த்தார்.
அங்கே அறுவை சிகிச்சை மூலம் கேன்சர் பாதிப்பை அகற்றுவதற்கான மருத்துவம் பரிந்துரை செய்யப்பட்டது. பல்வேறு கரங்கள் கொண்ட டா வின்சி என்ற மருத்துவ ரோபா மூலம் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
அதன்படி சாண்ட்ராவின் பெருங்குடலில் பீடித்திருந்த கேன்சர், டா வின்சி எந்திரனின் மூலமாக அகற்றப்பட்டது. ஆனால் அந்த அறுவைசிகிச்சையின்போது எதிர்பாரா விதமாக, சிறுகுடலில் விழுந்த துவாரம் காரணமாக, சாண்ட்ரா மிகவும் பாதிப்புக்கு ஆளானார்.
புற்றுநோய் பாதிப்பு காரணமாக வாழ்நாளை எண்ணி வந்த சாண்ட்ராவை, முந்திக்கொண்டு சாகடித்திருக்கிறது டா வின்சி ரோபோவின் தவறான அறுவை சிகிச்சை.
Related Posts