ஸ்டாலின் வீட்டின் அருகே பயங்கரம்: பிரியாணி கடையை சூறையாடிய ரவுடிகள்!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டருகே மாமூல் கேட்டு பாஸ்ட் புட் கடையை ரவுடிகள் சூறையாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைக் கடை ஊழியர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். இது தொடர்பாக பிரியாணி கடை உரிமையாளர் சதீஷ் வீடியோ ஒன்றை பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், முதல்வர் வீட்டருகே கடை நடத்தி வரும் நிலையில் ரவுடிகள் மாமூல் கேட்டு மிரட்டி வருகிறார்கள்.

 இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தேன், விஷயம் தெரிந்து ஆட்களுடன் கடைக்கு வந்த ரவுடி மணி கடையை சூறையாடி விட்டு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றதாக வேதனையோடு தெரிவித்துள்ளார். இதையடுத்து தேனாம்பேட்டை போலீஸார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Posts