ரோஹிதவின் சிறப்புரிமைகளை மீறிய ‘கேக் நோனா’

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

களுத்துறை “கேக் நோனா” என்ற பெண் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட பதிவுகளினால் தனது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த பெண் தன்னையும், பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனையும் அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பல்வேறு பதிவுகளை செய்துள்ளதாகவும், அந்தப் பதிவுகள் காரணமாக தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

தான் தவறு செய்திருந்தால் தன்னை விமர்சித்தாலும் பரவாயில்லை, தவறு செய்யாமல் இவ்வாறு விமர்சிப்பது சரியல்ல எனவும் ரோஹித அபேகுணவர்தன மேலும் தெரிவித்திருந்தார்.

முகநூல் பதிவுகளில் தான் திருடன் எனவும், உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் பதிவிட்டு வருகிறார்.

2015ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்காகவும் களுத்துறையில் இருந்து இந்த ‘கேக் நோனா’ என்று அழைக்கப்படும் இந்த பெண் போட்டியிட்டார்எனவும் ரோஹித அபேகுணவர்தன மேலும் தெரிவித்தார். (P)


Related Posts