நவல்னியின் மனைவி, மகளை சந்தித்து ஆறுதல் கூறிய ஜோ பைடன்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

  ரஷ்ய சிறையில் உயிரிழந்த அந்நாட்டு எதிர்கட்சி தலைவர் அலெக்சி நவல்னியின் மனைவியையும், மகளையும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சந்தித்தார்.

புடின் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்த நவல்னி மீது பல்வேறு மோசடிளை சுமத்தி 30 ஆண்டு புடின் அரசாங்கம் சிறை தண்டனை விதித்தது.


இந்நிலையில் ரஷ்யாவில் அதிபர் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அண்மையில் ஆர்டிக் பிரதேசத்தில் உள்ள கொடூரமான சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நவல்னி, கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நவல்னியின் மறைவுக்கு ஏதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, ரஷ்யாவின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறையை பாதிக்கும் வகையில் பல புதிய தடைகளை விதிக்கப்போவதாக ஜோ பைடன் தெரிவித்தார்.

Related Posts