தலைமன்னாரிலிருந்து கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கு பயணம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கச்சதீவு புனித அந்தோனியார்  ஆலய  2024 ம் வருடத்திற்கான திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பயணமாகி உள்ளனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் (23) 40 படகுகளில்  400க்கும்  மேற்பட்ட பக்தர்கள் தலைமன்னார் துறைமுகத்தின் ஊடாக  கச்சதீவு ஆலயத்திற்கு சென்றுள்ளனர்.

இன்று மாலை வழிபாடுகளுடன் ஆரம்பமாகும் திருவிழாவானது நாளை சனிக்கிழமை காலையில் யாழ்ப்பாணம் நெடுந்தீவு பங்கின் பங்கு தந்தையர்களின் தலைமையில் விசேட திருப்பலிகள் ஒப்புக் கொடுக்கப்பட்டு புனித  அந்தோனியார்  திருவிழா சிறப்பாக இடம்பெறவுள்ளது.

மேலும் இந்த வருட கச்சதீவு புனித   அந்தோனியார்  ஆலய திருவிழாவுக்கு இந்தியாவிலிருந்து பக்தர்கள் எவரும் வருகை தரவில்லை என கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Related Posts