கடனில் மூழ்கிய ரம்பா! வீட்டை விற்றுவிட்டாரா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் சினிமாவில் 90களில் சக்கை போடு போட்டவர் நடிகை ரம்பா.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, ஹிந்தி, போஸ்புரி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் உள்ள முன்னணி பிரபலங்களுடன் நடித்தது மட்டுமின்றி எல்லா தென்னிந்திய மொழிகளில் உள்ள எல்லா பெரிய தலைகளுடன் நடித்துள்ளார். எல்லா மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துவந்த ரம்பா ஒருகட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் சின்னத்திரையில் இறங்கிவிட்டார். பின் ரவீந்தர் என்பவரை ரம்யா திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். 

சினிமா துறையில் நுழைந்தவர்கள் பலர் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதனால் நிறைய நஷ்டத்தை அனுபவித்து சினிமாவே வேண்டாம் என்று சென்றவர்கள் பலர் உள்ளார். அப்படி நடிகை ரம்பாவும் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து நஷ்டத்தை சந்தித்துள்ளார். இவர் 3 ரோசஸ் படத்தை தயாரித்து நடித்தும் இருந்தார் ரம்பா, இந்த படத்தில் ஜோதிகா மற்றும் லைலாவும் முக்கிய வேடத்தில் நடித்தார்கள். படம் சரியாக ஓடவில்லை, இதனால் நஷ்டத்தை சந்தித்த நடிகை ரம்பா கடனை அடைக்க தனது வீட்டை விற்றிருக்கிறார். அதன்பிறகு ரம்யா இந்த தயாரிப்பு பக்கமே தலைகாட்டவில்லை. இப்போது மொத்தமாக சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தை மட்டும் கவனித்து வருகிறார்.

Related Posts