ரஜினிக்கு நோ சொன்ன பிரபல நடிகை ஏன்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டும் என்று பல நடிகர், நடிகைகள் போட்டி போட்டுகொண்டு இருக்கிறார்கள். நயன்தாரா தான் வளர்ந்து வரும் காலத்தில், ரஜினியுடன் ஒரு பாட்டிற்கு நடனமாட கடுமையாக முயற்சி செய்துள்ளார் பின்னரே வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேபோல் தான் கீர்த்தி சுரேஷும்! இப்படி நடிகைகள் ஆனால், பிரபல நடிகை ஒருவர் ரஜினியின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் கால்ஷீட் இல்லாத காரணத்தினால் நிராகரித்துள்ளார். அவர் வேறு யாருமில்லை, புன்னகை அரசி நடிகை சினேகா தான். ஆம், நடிகை சினேகாவிற்கு, ரஜினியின் தங்கையாக கோச்சடையான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. முதலில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். 

ஆனால், அதன்பின் ஷூட்டிங் தள்ளிபோய்க்கொண்டே இருந்ததனால், கால்ஷீட் இல்லை என்ற காரணத்தினால் இப்படத்தின் வாய்ப்பை நிராகரித்துள்ளார். அதன்பின், சினேகா நடிக்கவிருந்த ரஜினியின் தங்கை கதாபாத்திரத்தில் ஆனந்த தாண்டவம் பட நடிகை ருக்மிணி நடித்தார். சினேகா நடித்திருந்தால் இன்னும் வரவேற்பு அதிகமாக இருந்திருக்கும். ஆனால் மிஸ் செய்துவிட்டாரே சினேகா?

Related Posts