இரண்டு ஆண் இரட்டையர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிக்கு ஒருவரை ஹோமாகம தலைமையக பொலிஸார் கைது செய்தனர்
பின்னர் ஹோமாகம நீதவான் நீதிமன்றில் நேற்று (28) ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபரான பிக்கு 05 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
13 வயதுடைய இரண்டு ஆண் இரட்டையர்களை குறித்த பிக்கு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட பிக்கு யந்திரம் மந்திரம் மூலம் நோய்களைக் குணப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரண்டு சிறுவர்களில் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுகவீனமடைந்ததையடுத்து பெற்றோர்கள் அவரை பிக்குவிடம் அழைத்து சென்றுள்ளனர்.
பின்னர் பிக்கு, சிறுவனை சில நாட்கள் அங்கேயே வைத்து பூஜை நடத்த வேண்டும் என பெற்றோரிடம் கூறியதாகவும், அதன்படி சிறுவனை அங்கேயே தங்க வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், இரட்டைர்களில் மற்றையவர் தனது சகோதரர் இல்லாமலேயே நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், சந்தேக நபர் காரில் வீட்டுக்கு சென்று அந்த சிறுவனையும் அழைத்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேகநபரான பிக்கு சிறுவர்கள் இருவரையும் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபரான பிக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவர்கள் தற்போது சிகிச்சைக்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (P)