கிளிநொச்சியில் படகு விபத்து ; 7 பேர் காயம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கிளிநொச்சி - பூநகரி, பாலைதீவு பகுதியில் இரண்டு படகுகள் மோதுண்டதில் காயமடைந்த 7 பேர் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி - பூநகரி, பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா நேற்றைய தினம் இடம்பெற்றது.

இதன்போது குறித்த திருவிழாவுக்கு சென்ற இரண்டு படகுகள் மோதுண்டு விபத்துக்குள்ளானது,

இதனையடுத்து, விபத்தில் காயமடைந்த 7 பேர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Posts