பாராளுமன்ற அமர்வுகளுக்கு திகதிகள் அறிவிப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன பலவீனமான வேட்பாளரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கினால் கட்சியில் இருந்து விலகி ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவேன் என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், எமக்கும் அரசியல் கொள்கை ரீதியில் பாரியதொரு வேறுபாடுகள் காணப்படுகிறது. நாடு மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த போது எதிர்கால அரசியல் பற்றி ஆராய்ந்துகொண்டு சோதிடம் பார்த்துக்கொண்டிருக்காமல் தனி மனிதனாக ரணில் விக்ரமசிங்க பாரிய சவால்களை ஏற்றுக் கொண்டார்.

2022ஆம் ஆண்டைக் காட்டிலும் சமூக கட்டமைப்பு தற்போது மாற்றமடைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு என்ற குற்றச்சாட்டு மாத்திரம் முன்வைக்கப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது, புத்தாண்டுக்கு முன்னர் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடையும், நாட்டையும் நாட்டு மக்களையும் பொருளாதார நெருக்கடியில் இருந்து பாதுகாத்த அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நாட்டு மக்கள் கடமைப்பட்டுள்ளார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். (P)


Related Posts