Font size:
Print
கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் பற்றாக்குறை காரணமாக பல மருத்துவமனை செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி தேசிய வைத்தியசாலை, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை, குருநாகல் பொது வைத்தியசாலை, பதுளை பொது வைத்தியசாலை, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை உள்ளிட்ட பல வைத்தியசாலைகள் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக அதன் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
நிரந்தர அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறியமையே இதற்குக் காரணம் என சானக தர்மவிக்ரம குறிப்பிட்டார். (P)
Related Posts