Font size:
Print
பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையைக் குறைக்கும் சுற்றறிக்கை இன்று (4) வெளியிடப்படவுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கையை மேல்மாகாண கல்விச் செயலாளர் சிறிசோம லொக்குவிதான வெளியிடவுள்ளதுடன், போட்டிக் கல்விக்கும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் கனமான புத்தகப் பைகள் தடையாக இருப்பதாக மேல்மாகாண கல்வித் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்காலத்தில் குழந்தைகள் சுமந்து செல்லும் புத்தகப் பையின் எடை அதிகமாக இருப்பதால், குழந்தைகள் தொடர்ந்து முதுகுத்தண்டு தொடர்பான கோளாறுகளுக்கு ஆளாகி வருவதாகவும், இதனால் சில குழந்தைகள் நிரந்தர ஊனமுற்றவர்களாகவும் உள்ளதாக மருத்துவ அறிக்கைகள் உறுதி செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (P)
Related Posts