ஸ்ரேயா கோஷலின் யாரும் பார்த்திராத சிறுவயது புகைப்படம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இப்போதெல்லாம் பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகின்றன. அப்படி இப்போதும் ஒரு பிரபலத்தின் சிறுவயது புகைப்படம் ஒன்று வைரலாகிறது. அதில் அந்த பிரபலம் தனது தாய் மற்றும் சகோதரனுடன் இருக்கிறார். புகைப்படம் பார்த்தவுடனே இந்த நடிகையா, அந்த பிரபலமா என யோசிக்க தொடங்கியிருப்பீர்கள். ஆனால் இந்த புகைப்படத்தில் இருப்பது ஒரு நடிகை இல்லை, பிரபல பாடகி. சொல்லப்போனால் நடிகைக்கு இணையாக இவரையும் தமிழ் சினிமா கொண்டாடி கொண்டு இருக்கிறது. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் பாடி புகழ் பெற்றவர். சமீபத்தில் அவர் படு பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்ட ஆனந்த் அம்பானி திருமண கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அர்ஜித் சிங்குடன் பாடிய பாடல் கூட படு வைரலானது.இந்த விவரத்தை படித்ததும் யார் இந்த பிரபலம் என நீங்களே கண்டுபிடித்திருப்பீர்கள், அவர் வேறுயாரும் இல்லை பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் தான். இவரது குரலுக்கு மயங்காதவர்கள் இருக்கவே முடியாது.

Related Posts