நடிகர் அஜித் திடீரென மருத்துவமனையில் அனுமதி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகர் அஜித் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி வெளியாகிய ரசிகர்களை பதட்டம் அடைய செய்துள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது.

ஆனால் அங்கு வானிலை சரியாக இல்லாத காரணத்தினால் சில காலம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. இதற்கு அடுத்தபடியாக விடாமுயற்சி படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைக்கா லால் சலாம் படத்தின் வசூலால் சிறிது தடுமாறிய நிலையில் நிதி பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது. அதன் பிறகு படப்பிடிப்பு தொடங்க விடாமுயற்சி படக்குழு முன்வந்தனர்.

அதன் பிறகு த்ரிஷாவின் கால்ஷீட் பிரச்சனையானது. இதைத்தொடர்ந்து ரஜினியின் வேட்டையன் படத்தையும் லைக்கா நிறுவனம் தயாரித்து வருவதால் இந்த படத்தின் ஓடிடி உரிமை விற்ற பிறகு விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். அதற்குள்ளாக இன்று அஜித் திடீரென அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதாவது இது வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகத் தான் அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆகையால் இன்று பரிசோதனை முடிந்து வீட்டுக்கு திரும்ப வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் எந்தவித அச்சமும் பட தேவையில்லை.

அஜித் பைக் ரேஸில் மிகவும் ஈடுபாடு உடையவர் என்பதால் அவர் பலர் விபத்துகளை சந்தித்து இருக்கிறார். இதனால் கேரளாவுக்கு சென்று சிகிச்சையும் மேற்கொண்டு வந்திருக்கிறார். இதனால் அடிக்கடி அஜித் மருத்துவ பரிசோதனை செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். மேலும் விடாமுயற்சி படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏகே 63 படம் உருவாக இருக்கிறது. (P)


Related Posts
©   Thedipaar

முட்டைக்கு VAT வரி

©   Thedipaar

RBI-யின் புதிய ரூல்ஸ்!