பெங்களூரில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பெங்களூரில் எப்போதும் இல்லாத வகையில் இவ்வாண்டு கடும் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. குடிநீர் கிடைக்காமல் மக்கள் பரிதவிப்பதை தவிர்க்க மாநகர குடிநீர் வாரியம், மாவட்ட நிர்வாகம் பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொண்டு வருகிறது. குடிநீர் பஞ்சத்தின் தாக்கம் சாமானிய மக்களுக்கு மட்டுமில் லாமல், முதல்வர் சித்தராமையாவின் அரசு அலுவலக இல்லமான கிருஷ்ணா, துணை முதல்வரின் அரசு இல்லம், சில அமைச்சர்களின் வீடுகளுக்கும் காவிரி குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பெங்களூருவில் தனியார் பள்ளிகள் வகுப்புகளை ஆன்லைன் மூலம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி அறிவுரை வழங்கி உள்ள நிலையில், பெங்களூருவில் தோட்டம், கார் கழுவுதல், கட்டுமானப் பணிகளுக்கு தண்ணீரை பயன்படுத்த தடை விதித்துள்ளது.

Related Posts
©   Thedipaar

முட்டைக்கு VAT வரி

©   Thedipaar

RBI-யின் புதிய ரூல்ஸ்!