அதிக வெப்பம் காரணமாக கண் நோய்கள் ஏற்படும் சாத்தியம்; அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் !

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அதிக வெப்பம் காரணமாக கண் நோய்கள் ஏற்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக  கண் மருத்துவ நிபுணர்கள் ​தெரிவித்துள்ளனர்.

சூரிய ஒளி நேரடியாக கண்ணில் பட்டால், அதன் செல்கள் சேதமடைவதுடன்,  விழிப்புலன் இழக்கப்படலாமென கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர், கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் மதுவந்தி திசாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன், வெப்பம் காரணமாக கண் வறட்சி ஏற்படும் என்பதினால், தேவையான நீராகாரங்களை உட்கொள்வது அவசியமென அவர் சுட்டிக்காட்டினார்.

வயதானவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுமெனவும் அவர் கூறினார்.

கணினி பாவனை அதிகம் உள்ள நபர்கள் மற்றும் ஏற்கனவே கண் நோய் உள்ளவர்களுக்கு பாதிப்புகள்  அதிகரிக்கக் கூடுமெனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். (P)


Related Posts