ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் ஜனாதிபதி அழைப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லையெனவும், சிலரின் கட்டுப்பாட்டில் அந்தக் கட்சி இருப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டைக் கடன் சுமையில் இருந்து காப்பாற்றி, எதிர்காலச் சந்ததிக்காக பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு அனைத்து ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார். 

குளியாபிட்டிய மாநகர சபை மைதானத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டுக்காக ஒன்றுபட்டு உழைக்க விரும்பும் மக்களின் சந்திப்பான இந்தப் பொதுக் கூட்டம் “நிதர்சனம்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு, இந்த முதலாவது பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

 

இங்கு உரையாற்றிய பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மக்கள் மத்தியில் சென்று அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.


ஜனாதிபதியாக பதவியேற்றது முதல், கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினரும் வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, குறுகிய அரசியல் நலன்களை நிறைவேற்றாமல் நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். (P)

Related Posts