தான்சானியா தேசத்தில் ஆமைக்கறி உண்டதில் 8 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 78 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செவ்வாயன்று அடுத்தடுத்து உயிர்ப்பலிகள் நேர்ந்ததில், வெள்ளிக்கிழமை அன்று அதன் பின்னணியில் இருந்த ஆமைக்கறி கண்டறியப்பட்டது. பலியானவர்கள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் அனைவரும் ஆமைக்கறி சாப்பிட்டு இருப்பதும் மருத்துவ பரிசோதனையில் உறுதியாகி உள்ளது.
இதனையடுத்து சான்சிபார் அதிகாரிகள், ஹம்சா ஹசன் ஜூமா என்பவர் தலைமையில் ஒரு குழுவை நியமித்து, கடல் ஆமைகளை உட்கொள்வதைத் தவிர்க்குமாறு மக்களை வலியுறுத்தி வருகின்றனர்.
முன்னதாக நவம்பர் 2021 அன்று, ஆமைக்கறியை உண்டதாக 3 வயது குழந்தை உட்பட ஏழு பேர் பெம்பாவில் இறந்தனர். மேலும் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சுவையான ஆமைக்கறி விஷமாக மாறியது எப்படி என்று தான்சானியா மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.