இந்தியாவில், மரபணு நோய் அல்லது குடும்பத் தகராறு ஏற்படும்போது மக்கள் பொதுவாக டிஎன்ஏ பரிசோதனை செய்துகொள்கின்றனர். அத்தகைய ஒரு சோதனையை ஒரு பெண் மேற்கொண்டார்.
அதில், தான் 26 வருடங்களாக தந்தை என அழைத்து வந்த நபர் தனது தந்தை இல்லை என தெரியவந்துள்ளது. மேலும் தனது 50% டிஎன்ஏ அடையாளம் தெரியாத நபருடன் ஒத்து போவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், தனது தாயாரிடம் இது குறித்து கேட்டார். அதற்கு அவர் சிரித்துவிட்டு கடந்து சென்றதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், சிலரிடம் விசாரித்ததில், தனது தாய்க்கு 19 வயதில் திருமணம் நடைபெற்றதாகவும், தந்தையாக அழைக்கப்படுபவருக்கு முன்பு தாயுடன் ஒரு நண்பர் பழகியதாகவும் கூறப்படுகிறதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் உண்மை என்னவென்றே தெரியாமல் அந்த பெண் அதிர்ச்சியிலேயே உலாவி வருகிறார்.
துப்பாக்கி சூட்டில் தப்பியவர்கள் வீடுகள் மீது தாக்குதல் | Thedipaar News