நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிகமான வெப்பநிலை ! அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இன்று (15) நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் எனவும் இதனால் மக்களை அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

தொழிலுக்காக செல்வோர் போதுமான அளவு தண்ணீரை அருந்துமாறும், நிழலான பகுதிகளில் முடிந்தவரை ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் வீடுகளில் இருக்கும் முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை கவனித்துக்கொள்ளுமாறும், குழந்தைகளை தனியாக வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. (P)



Related Posts