"உடன் விடுதலை செய்"

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

வவுனியா - வெடுக்குநாறி மலை ஆதிசிவனார் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் விடுவிக்கக்கோரி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டமானது தற்போது நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தை அடைந்துள்ளது.

நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு தற்போது, தமது ஆர்ப்பாட்டத்தை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பொலிஸ் உயர் அதிகாரிகள் மக்களிடத்தில் உரையாட வருகைதந்த போதும் அதை புறக்கணித்த மக்கள் அவர்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

இதன் காரணமாக விசேட அதிரடிப்படியினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



இந்நிலையில் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக, நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்லஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறீதரன், வினோநோதராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட நிலையில் தமக்கான நீதி வழங்கக் கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 12ஆம் திகதி  தொடங்கிய குறித்த உண்ணாவிரத போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் நீடித்து வருகின்றது.

கைதுசெய்யப்பட்ட எட்டு பேரில் ஆலய பூசாரியார், மற்றும் தமிழ்ச்செல்வன், கிந்துயன், தவபாலசிங்கம், விநாயகமூர்த்தி ஆகியோரே உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.



இதேவேளை அவர்கள் வழமை போல உணவினை உட்கொள்வதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, வவுனியாவை சேர்ந்த சட்டத்தரணிகளான கொன்சியஸ் மற்றும் திலிப்காந் ஆகியோர் சிறைச்சாலைக்கு சென்று அவர்களை பார்வையிட்டதுடன் அவர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றமையினை உறுதிப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் உறவுகள் நீதிகோரி நேற்று வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க அழைப்பு விடுத்திருந்தனர்.

இதன் பின்னணியில் வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



தட்டம்மை நோய் பரவல் குறித்து எச்சரிக்கை! | Canada | Thedipaar News

Related Posts