அதிக இனப்பெருக்க திறன்: ஆண்கள் ஆயுளை குறைக்கும்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இங்கிலாந்தில் உள்ள உயிரியியல் வங்கியில் ஆராய்ச்சி தேவைக்காக பலர் தங்களுடைய மரபணுக்களை சேமித்து வைத்துள்ளனர். இதுபோன்று சேகரித்த 2 லட்சத்து 76 ஆயிரத்து 406 பேரின் மரபணுக்களை ஆய்வு செய்து தரவுகள் திரட்டப்பட்டன. இதில், பல ஆச்சரியம் தரும் தகவல்கள் கிடைத்தன.

இதன்படி, இனப்பெருக்க திறனை ஊக்குவிக்க கூடிய மரபணுவை சுமந்து கொண்டிருக்கும் மக்கள் தங்களுடைய வயது முதிர்வு காலத்தில் தப்பி பிழைப்பதற்கான சாத்தியம் குறைவாக உள்ளது என தெரிய வந்துள்ளது.பொதுவாக, ஆண்கள் என்றால் தங்களுடைய ஆண்மை தன்மையை அதிகரித்து காட்டும் விசயங்களாக சில விசயங்களை பேணி பாதுகாப்பது வழக்கம். 

மீசையை வளர்ப்பது, அதுவும் பெரிய அளவில் வளர்ப்பது என்பது, வெளிதோற்றத்தில் ஆண்மை தன்மையை அதிகரித்து காட்டும். பெண்களும் இதுபோன்ற சில விசயங்களை தனித்துவமுடன் பாதுகாத்து வருகின்றனர். எனினும், இனப்பெருக்க விசயத்தில் மனிதர்களின் செயல்பாடுகளின் தன்மை பற்றி ஆய்வாளர்கள் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டு உள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஜியான்ஜி ஜாங் கூறும்போது, இனப்பெருக்க திறனை ஊக்குவிக்க செய்யும் மரபணு பிறழ்வுகள், வாழ்நாளை குறைக்க கூடும் என்று கூறியுள்ளார். 

Related Posts