Font size:
Print
உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து ஏழாவது முறையாக முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. அமெரிக்கா 15ஆவது இடத்திலிருந்து 23ஆவது இடத்துக்கு சறுக்கியுள்ளது, பிரித்தானியா 20ஆவது இடத்தில் உள்ளது.
உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில், கனடா 13ஆவது இடத்திலிருந்த நிலையில், தற்போது அது கோஸ்டா ரிக்கா, குவைத் மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகளைத் தாண்டி, 15ஆவது இடத்துக்கு இறங்கியுள்ளது.
கனடா மற்றும் அமெரிக்காவில் 30 வயதுக்குக் கீழுள்ளவர்கள் மகிழ்ச்சி குறைந்தவர்களாக மாறியுள்ளனர் என உலக மகிழ்ச்சி அறிக்கை ஆசிரியர்களில் ஒருவரான கனேடிய பொருளாதாரவியல் நிபுணர் John Helliwell கூறியுள்ளார்.
குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் நடிகையின் உயர்ந்த உள்ளம்! | Thedipaar News
Related Posts