இலங்கை நிர்வாக சேவைகள் சங்க ஊடக மாநாட்டில் குழப்பம் – நால்வர் கைது!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் குறைந்தபட்ச கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்படாவிட்டால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது.

திறைசேரியில் அறவிடப்படும் பணத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு நிதி செயலாளரிடம் கோரிக்கை விடுப்பதாக சங்கத்தின் தலைவர் மகேஷ் லசந்த கம்மன்பில தெரிவித்தார்.

இதற்கான கொள்கையை தயாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்த செய்தியாளர் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஒரு குழுவினர் குறுக்கிட்டதால் அங்கு பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதன்போது குறுக்கிட்ட நான்கு பேர் குருந்துவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். (P)


Related Posts