அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்தது!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள ஒரு பாலம், கன்டெய்னர் கப்பல் மோதியதில், படாப்ஸ்கோ ஆற்றில் முற்றிலுமாக இடிந்து விழுந்தது.ஏழு பேர், பல வாகனங்கள் ஆற்றில் விழுந்ததாக தற்போது சம்பவ இடத்தில் இருக்கும் பால்டிமோர் நகர தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.பாலம் முழுவதுமாக தண்ணீரில் இறங்குவதை சமூக ஊடகங்களில் காணொளிகளில் காண முடிகிறது.

300 மீட்டம் நீளம் கொண்ட இந்த கப்பல் இலங்கையின் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்தது. போலீஸ் ஹெலிகாப்டர்கள் அப்பகுதியில் பலமுறை சுற்றிவருவதை விமானப் போக்குவரத்து ராடார்கள் காட்டுகின்றன.

கப்பல் ஊழியர்களுக்கு காயங்கள் எதுவும் இல்லை என்று நிறுவனம் கூறுகிறது சிங்கப்பூர் கொடியுடன் வந்த டாலி என்ற கன்டெய்னர் கப்பல் மோதியதை கப்பல் நிறுவனமான சினெர்ஜி மரைன் குழு உறுதிப்படுத்துகிறது.

சம்பவத்தின் சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அது கூறுகிறது. கப்பலில் இருந்த இரண்டு மாலுமிகள் உட்பட அனைத்து பணியாளர்களும் கணக்கிடப்பட்டுள்ளனர். மேலும் காயங்கள் எதுவும் இல்லை என்று அது மேலும் கூறுகிறது.

Related Posts