Font size:
Print
சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய நிலவின் பகுதிக்கு பிரதமர் மோடி சூட்டிய ‛ சிவசக்தி' என்ற பெயரை சர்வதேச வானியல் ஒன்றியம் அங்கீகரித்துள்ளது.
சந்திரயான்-3-ன் விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த ஆகஸ்ட் மாதம் நிலவின் தென்பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
அப்போது இஸ்ரோவுக்கு சென்ற பிரதமர் மோடி, விஞ்ஞானிகளை வெகுவாக பாராட்டி இருந்தார்.
விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய நாளான ஆகஸ்ட் 23 ஆம் திகதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் எனவும் அறிவித்ததுடன் நிலவில் விக்ரம் லேண்டர் தடம் பதித்த பகுதிக்கு சிவசக்தி எனவும் பிரதமர் பெயர் சூட்டினார்.
இந்த நிலையில், கோள்களுக்கு பெயர் சூட்டும் சர்வதேச வானியல் ஒன்றியத்தின் செயற்குழு, பிரதமர் மோடி சூட்டிய“ சிவசக்தி” என்ற பெயரை தற்போது அங்கீகரித்துள்ளது.
Related Posts