நடிகர் முரளியின் தம்பியா இவர்? இறந்துபோன டேனியல் பாலாஜி பின்னணி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் சினிமாவில் உள்ள பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது நடிகர் டேனியல் பாலாஜியின் மரணம். மாரடைப்பு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட டேனியல், வழியிலே மரணமடைந்துள்ளார். இவருடைய மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர் திரையில் தோன்றினாலோ ஒரு பயம் இருக்கும் அந்த அளவிற்கு தன்னுடைய முக தோற்றத்தாலே வில்லன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார். 44 வயதாகும் இவர் சித்தி சீரியல் மூலம் அறிமுகமானார். பொல்லாதவன் படத்தில் நடித்து திரையுலகில் வில்லனாக மிரட்ட துவங்கினார். பின் வேட்டையாடு விளையாடு, வடசென்னை, பைரவா, காக்க காக்க, பிகில் போன்ற படங்களில் நடித்து வந்தார். 

நடிகர் டேனியல் பாலாஜி, வேறு யாரும் இல்லை மறைந்த நடிகர் முரளியின் தம்பி தான். இதை டேனியல் பாலாஜி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த செய்தி பலருக்கும் தெரியாது, இவரது இறப்பை அடுத்து இவர் குறித்த பல செய்திகள் வைரலாகி வருகின்றன, அவற்றுள் ஒன்று தான் இவர் நடிகர் முரளியின் தம்பி மற்றும் நடிகர் அதர்வாவின் சித்தப்பா என்பதும்!

நடிகர் டேனியல் பாலாஜி கண்கள் தானம் | Thedipaar News

Related Posts