குவைத்திலிருந்து தன் எஜமானரையும் அழைத்து வந்த மனைவி – கோபம் கொண்டு வீட்டுக்கு தீ வைத்த கணவன் !

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பிபில பகுதியில் நபர் ஒருவர் தன் வீட்டை தீ வைத்து எரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நபரின் மனைவி குவைத்தில் வீட்டு வேலை செய்து வந்த நிலையில், தான் வேலை செய்த வீட்டின் எஜமானரான 80 வயது முதியவரை அழைத்து வந்த நிலையில், அவர் வீட்டில் தங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் இன்று அதிகாலை வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.

இருந்த 76 வயது முதியவர் ஒருவர் உள்ளிட்டோர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், அவர்கள் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிபில பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டிற்கு தீ வைத்ததாக கூறப்படும் நபர் மொனராகலை மாவட்ட உள்ளூராட்சி சபையின் சாரதி எனவும் அவர் தற்போது குறித்த பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிபில பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேசவாசிகள் அடங்கிய குழு தீயை அணைத்த போதிலும், வீடு மற்றும் அதன் உள்ளடக்கங்கள் மோசமாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (P)Related Posts