மிட் டவுன் ரொறன்ரோவில் காலை துப்பாக்கிச்சூடு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

திங்கட்கிழமை காலை மிட் டவுன் ரொறன்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். காலை 8:08 மணியளவில் பேவியூ அவென்யூ மற்றும் பொட்டரி சாலைக்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகத் தகவல் கிடைத்ததாக போலீஸார் கூறுகின்றனர்.

ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் நீல நிற எஸ்யூவியில் தப்பிச் செல்வதைக் காணமுடிந்தது என கூறினர். 

ஹாம்ப்டன் பார்க் கிரசென்ட் மற்றும் ட்ரூ டேவிட்சன் டிரைவ் அருகே வசிப்பவர்களை தகவல் தெரிவிக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Posts