இருவேறு பகுதிகளில் இரண்டு சடலங்கள் மீட்பு !

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நாட்டில் இரு வேறு  பிரதேசங்களில் நேற்றைய தினம் இரண்டு கொலைகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கலவானை மற்றும் மூதூர் பொலிஸ் பிரிவுகளில் இந்த கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூதூர், பஹிரியா நகர் களப்பு பகுதியில் நபரொருவரின் சடலமொன்று உள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், குறித்த நபர் மூதூர் 01, பஹிரியா நகர் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இறந்தவரின் கை, கால்கள் கட்டப்பட்டு இரு கைகளிலும் மணல் மூட்டை கட்டப்பட்டிருந்ததுடன், இது கொலையாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த நபர் கடந்த 30ஆம் திகதி இரவு யாருக்கும் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.

கொலையை செய்த சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கலவானை – மத்துகம வீதியில் நகருக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் கழுத்தறுத்து ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

53 வயதான தெல்கொட கலவான பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையை செய்த 37 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலவானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (P)


Related Posts